கிண்டி அடுத்த ஆலந்த்தூர் நீதிமன்றம் வளாகம் அருகில் இந்தியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அனைத்து ஜமாத்துக்கள், அனைத்து மாவட்டங்களிலுமிருந்து வந்திருக்கின்ற இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றினைந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு 650 அடி நீளமுள்ள தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி மக்களை மத ரீதியில் பிரிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுநர் மாளிகையை நோக்கி மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.
பேரணியில் மோடி அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேசுகையில், 2020ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது. பேரவையில் எங்களுடைய முழக்கத்தை நாடே திரும்பி பார்க்கும், மற்ற மாநில முதலமைச்சரை பார்த்து தமிழ்நாடு முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுனார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சம்ஸ்சுல்லஹா பேசுகையில், இன்று நடைபெற்ற எங்கள் போராட்டத்தை அமைதியான முறையில் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உள்ளோம்.