சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மூத்தத் தலைவர் தோழர் தியாகு, "சமீபத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அறப்போராட்டத்தை வளர்த்துச் செல்லும் வகையில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 2020 ஜனவரி முதல் நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள சாலையில் மக்கள் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடுக்கிறேன்" என்றார்.
ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம் நடத்த திட்டம் மேலும், போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் கைவிட வேண்டும், போராடும் மக்கள் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும், காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள இந்திய படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களுடன் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது' - அமித் ஷா