சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்துவதைத் எதிர்த்தும், அந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமுமுக மாவட்டச் செயலாளர் நயினார் முகம்மது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு என்.ஆர்.சி. சட்டத்தைத் திரும்ப பெற வலியுறத்திக் கோஷங்களை எழுப்பினர்.
சி.ஏ.ஏ.சட்டத்தை எதிர்த்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்! - chennai pammmal news
சென்னை: பம்மலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், சி.ஏ.ஏ. சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பம்மலில் சி.ஏ.ஏ.சட்டத்தை எதிர்த்து தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!
இதுகுறித்து, செயலாளர் நயினார் முகம்மது கூறுகையில் ’’கரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆங்காங்கே மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைப் பற்றி கவலைப்படாமல் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்பட்டுள்ளது" எனக் குற்றம்சாட்டினார். இதில், விடுதலை சிறுத்தைக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு