தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐக்கிய அரபு நாட்டால் சிறைபிடித்த 100 பேர் - தனி விமானம் மூலம் இந்தியா திரும்பினர்! - UAE Captives 100 people Returned to India

சென்னை: ஐக்கிய அரபு நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட 100 பேர் நாடு திரும்பியதையடுத்து, தற்போது சென்னை ஆவடி விமானப்படை நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரபு நாட்டால் சிறைபிடித்த 100 பேர்
அரபு நாட்டால் சிறைபிடித்த 100 பேர்

By

Published : May 24, 2020, 12:27 PM IST

ஐக்கிய அரபு நாடுகளில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்ததால், அந்நாட்டு அரசால் பிடித்து காவலில் வைக்கப்பட்டிருந்த 100 இந்தியா்கள், தனி விமானத்தில் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். அவா்கள் அனைவரும் பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திலிருந்து ஆவடி விமானப்படை நிலையம் கொண்டுச் செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்தியா்கள் பலா் முறையான பாஸ்போா்ட், ஆவணங்கள் இல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளில் தங்கியிருந்ததை அந்நாட்டு அரசு கண்டுபிடித்தது. பின்னர், அவா்கள் அனைவரையும் பிடித்து அங்கு காவலில் வைக்கப்பட்டனர்.

இவா்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். இவா்களில் பலா் பாஸ்போா்ட்களை தவற விட்டவா்கள், சுற்றுலா விசாவில் சென்று அங்கு நிரந்தரமாக தங்கிவிட்டவா்கள், ஏஜெண்டுகள் மூலம் போலி பாஸ்போா்ட்டில் சென்றவா்கள் என்று பல தரப்பினா் உள்ளனா். இவா்கள் அனைவரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று ஐக்கிய அரபு அரசுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் மத்திய அரசு கோரியது.

அதன்படி ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 100 பேர் இந்தியா திரும்பினர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details