தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தல் பரப்புரை: இபிஎஸ்-ஓபிஎஸ் பயண விவரம் வெளியீடு - Chief Minister, Deputy Chief Minister travel details

சென்னை: இடைத்தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர்

By

Published : Oct 4, 2019, 3:16 PM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்கிறார்.

அதன்படி, வருகிற 12 , 16, 18 ஆகிய மூன்று நாட்கள் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்கிறார்.

இதேபோல, நாங்குநேரி தொகுதியில் 13, 14, 17 ஆகிய தேதிகளில், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இவ்விரு தொகுதிகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா மூன்று நாள்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபடுகிறார்.

அதேபோல் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 13, 14, 17ஆகிய மூன்று தினங்கள் விக்கிரவாண்டியிலும் 15,16, 18 ஆகிய மூன்று நாட்கள் நாங்குநேரியிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இதனிடையே, நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்தும் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் நா. புகழேந்தியை ஆதரித்தும், மு.க. ஸ்டாலின் பரப்புரை செய்கிறார். முன்னதாக, இடைத்தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details