சென்னை: மேற்கு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (42). இவர் கடந்த 5ஆம் தேதி மேற்கு அண்ணா நகர் வடக்கு பிரதான சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இனோவா காரில் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவரது கார் தீப்பற்றி எரிந்த நிலையில், இவ்விபத்தில் சிக்கி கணேசனுக்கு 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணேசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கணேசனின் மனைவி பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.