தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபர் கடத்தல் வழக்கு; விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் உதவி ஆணையருக்கு சிபிசிஐடி சம்மன்! - chennai

தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தொழிலதிபர் கடத்தல் வழக்கு; விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் உதவி ஆணையருக்கு சிபிசிஐடி சம்மன்
தொழிலதிபர் கடத்தல் வழக்கு; விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் உதவி ஆணையருக்கு சிபிசிஐடி சம்மன்

By

Published : Jul 2, 2022, 5:37 PM IST

சென்னை: அயப்பாக்கத்தைச்சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சொத்துகளை அபகரித்ததாக கடந்த 2019ஆம் ஆண்டு டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப்புகார் தொடர்பாக கடந்த 2021 ஜூன் மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மற்றும் 3 காவலர்கள், ஆந்திர தொழிலதிபர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் என 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆந்திர தொழில் அதிபர் வெங்கட சிவநாககுமார், கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆணையர் சிவகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்ததாக சௌகத் அலி, நந்தகுமார், சரவணகுமார் என மொத்தமாக ஐந்து பேரை ஏற்கெனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி நண்பருடைய வீட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெற்றார்.

இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கில் சிவக்குமார் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர் நியமனம்: தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி - நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details