தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வணிகர்கள் கருத்தாய்வு கூட்டம்: தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வழிவகை கிடைக்கும் - விக்கிரமராஜா - தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வழிவகை கிடைக்கும்

மலேசியா, சிங்கப்பூரில் வணிகர்கள் கருத்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வழிவகை கிடைக்கும் என தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விக்கிரமராஜா பேட்டி
விக்கிரமராஜா பேட்டி

By

Published : Nov 3, 2022, 4:07 PM IST

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடைபெறும் வர்த்தக சங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் வியாபாரிகள் சென்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "முதலமைச்சர் தொடங்கி வைத்த இளம் தொழில் முனைவோர் அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. படித்த பட்டதாரி ஒருங்கிணைந்து பாரம்பரிய தொழில்களை காக்க செயல்பட்டு வருகிறது.

விக்கிரமராஜா பேட்டி

மலேசியாவில் 4 ஆம் தேதி கருத்தரங்கம் நடக்க உள்ளது. நாடு முழுவதும் வணிகர்கள், உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர். 7 ஆம் தேதி சிங்கப்பூரில் கருத்தாய்வு கூட்டம் நடக்கிறது. அந்த கருத்தாய்வு கூட்டத்தில் இளம் தொழில் முனைவோர் முலமாக பொருள் வர்த்தகம் செய்ய கூடிய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

பண பரிமாற்றம் பாதுகாப்பு மையமாக இருக்கும். தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் செல்கிறோம். தமிழ்நாட்டிற்கு அனைத்து நாட்டில் இருந்து வணிகம் செய்ய வழிவகை இருக்கும். ஆன்லைன் வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை கடுமையாக எதிர்க்கிறோம். ஆன்லைன் வணிகம் முலம் பல்வேறு தவறுகள் நடந்து உள்ளதை அரசு துறை அதிகாரி சுட்டி காட்டி இருக்கிறார்.

கோவை சம்பவத்திலும் ஆன்லைன் முலமாக சில பொருட்கள் கைமாறி உள்ளதை அறிகிறோம். ஆன்லைன் மருந்து விற்பனையால் இளம் சமுதாயம் பாதிக்கப்படுகிறது. அதை கடுமையாக எதிர்க்கிறோம். அதில் மாற்று கருத்து இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை? - சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details