தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும்! - tn government bans bus services
17:01 July 13
சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை ஜூலை 1ஆம் தேதிமுதல் 15ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டது.
அந்தத் தடை ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. எனவே அரசின் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:'சிறந்த சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' - தமிழ்நாடு அரசு