தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணச்சீட்டு மோசடி வழக்கு: நடத்துநர் பணிநீக்கம் செல்லும் - உயர்நீதிமன்றம் - Bus Ticket Fraud Case in high court judgement

சேலம்: பயணிகளிடம் வசூல் செய்த கட்டண தொகையில் 69 ரூபாய்யை கையாடல் செய்த நடத்துநரை பணி நீக்கம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bus ticket Fraud Case

By

Published : Oct 25, 2019, 4:20 AM IST

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1993ஆம் ஆண்டில் நடத்துநராக பணியில் சேர்ந்த மணிமாறன் என்பவர், அருளாளம் - தேன்கனிக்கோட்டை வழித்தட பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். கடந்த 1994ஆம் ஆண்டு மணிமாறன் நடத்துநராக இருந்த பேருந்தில், பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, ஏற்கனவே விற்கப்பட்ட டிக்கெட்களை 40 பயணிகளிடம் 2 ரூபாய் 20 காசுகளுக்கு விற்றதுடன், வசூல் செய்த தொகையில் 68 ரூபாய் 95 காசு கையாடல் செய்ததாகவும் நடத்துநர் மணிமாறன் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்கு பிறகு மணிமாறனை பணி நீக்கம் செய்து 1995ஆம் ஆண்டு போக்குவரத்து கழகம் உத்தரவு பிறபித்தது.

7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உத்தரவை எதிர்த்து மணிமாறன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நல நீதிமன்றம், அவரை மீண்டும் பணியில் அமர்த்தவும், பணி நீக்க காலத்திற்கான ஊதியத்தில், 25 சதவீத தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், மணிமாறன் பணியிலிருந்த 2 ஆண்டுகளில் 4 முறை தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் என்றும், பணி நீக்கம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்த வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம், மீண்டும் பணி வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விவசாயி-யிடம் நிலத்தை அபகரித்தவருக்கு எதன் அடிப்படையில் ஜாமின் - உயர்நீதிமன்றம் கேள்வி?

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details