சென்னை அண்ணாநகர் பஸ் டிப்போவில் ஊழியர்கள் பேருந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் 27B எண் கொண்ட பேருந்தானது காணாமல் போனதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து ஊழியர்கள் திருமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பேருந்தில் பொறுத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவியை ஆய்வு செய்ததில் பேருந்தானது பாடி மேம்பாலம் கீழ் நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் பேருந்தை மீட்டனர்.