சென்னை: பள்ளிக்கல்வித்துறை 4,5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிட்ட மாணவர்களுக்கான ஊஞ்சல் முதல் இதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த இதழில் பேருந்துகளை உவமையாக்கி இந்து - இஸ்லாமியர்கள் இடையே மோதல் இல்லை என இரு மதங்களின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் 'அன்பு' எனும் தலைப்பில் கதை புனையப்பட்டுள்ளது.
அன்பு எனும் தலைப்பில் இந்து - இஸ்லாமியர்கள் இடையே மோதலில்லை என்பதை எடுத்துரைக்கும் கதை வெளியிடப்பட்டுள்ளது. அகிலன், அப்துல்லா எனும் இரு பேருந்துகள் பட்டுக்கோட்டையிலிருந்து, தஞ்சைக்கு செல்லும் ஒரே வழித்தடத்தில் செல்லும் இரு பேருந்துகளும் பேசிக்கொள்ள வேண்டும், நட்பு பாராட்ட வேண்டும் என நினைக்கும். பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் போதெல்லாம் இரு பேருந்துகளும் வணக்கம் செலுத்த நினைக்கும்.
ஆனால், அதன் நடத்துநர்கள் விசிலடித்து விடுவதால் அது நடக்காமல் இருந்தது. ஒரு நாள் ஒன்றன்பின் ஒன்றாக இரு பேருந்துகளும் செல்லும்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் அகிலன் பேருந்து அப்துல்லா பேருந்து மீது மோதிவிட்டது.
பயணிகள் எல்லோரும் சாலை ஓரத்தில் நின்று வேறு பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர். நீண்ட நாள் ஆசைப்பட்டு இரண்டு பேருந்துகளும் தனியாக சந்தித்து மகிழ்ந்தனர். விபத்து நடந்ததால் பயணிகள் எல்லாம் பதற்றத்தில் இருந்தனர்.
மாணவர் இதழில் ஒற்றுமை பாடம் அப்போது பேருந்துகள் இரண்டும் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்ளவில்லை. நண்பர்களாகவே இருக்கின்றோம், அன்பாக தொட்டுக்கொண்டோம் அவ்வளவுதான் என்று சத்தம் போட்டுக்கூறின. ஆனால், பேருந்துகள் சொன்னது பயணிகள் யாருக்கும் புரியவில்லை; உங்களுக்கு புரிகிறதா என கதை முடிந்துள்ளது.
இதில் உவமையாக காட்டப்பட்டுள்ள இரண்டு பேருந்துகளும் இரண்டு மதங்கள் எனப்புரிந்து கொண்டால் இரு மதங்களுக்கிடையே மோதல் உள்ளதாக தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவும், தாங்கள் என்றும் மோதிக்கொள்ளவில்லை அன்பாக இருப்பதாகவும்; மோதிக்கொள்வதாக தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக இருப்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்து பிரச்னை: அரசைக் கண்டித்து பெண் தற்கொலை முயற்சி