தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து இயங்கும்! - தமிழ்நாடு முழுவதும் இன்று பேருந்து இயங்கும்

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை 5) முதல் 50 விழுக்காடுப் பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

bus service resume
bus service resume

By

Published : Jul 5, 2021, 2:56 AM IST

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலை 2ஆம் தேதி முதல் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்குமான பொதுத் தளர்வுகளை அறிவித்தார்.

அதன்படி இன்று முதல் தமிழ்நாட்டில், மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

பேருந்து நிலையங்களில் உள்ள இருக்கைகள், கழிவறைகள், நடைபாதைக் கடைகள் அனைத்துக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டன. பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு சோதனையோட்டம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:நீட் தேர்வு: சூர்யாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய பாஜக

ABOUT THE AUTHOR

...view details