கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகர போக்குவரத்து சேவை நாளை காலை முதல் மீண்டும் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பேருந்து பராமரிப்பு பணிகள் சென்னை பல்லவன் சாலையில் உள்ள பணிமனை உட்பட அனைத்து பணிமனைகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பேருந்துகளை தூய்மைப்படுத்துவது, கிருமி நாசினி தெளிப்பது, சக்கரத்தில் காற்றழுத்தத்தை உறுதிப்படுத்துவது, பேட்டரிகள் சரியாக உள்ளதா என சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "கடந்த மே மாதம் சென்னையை தவிர்த்து மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையான வழிமுறைகளை சென்னை போக்குவரத்து ஊழியர்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.