தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
வரும் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 5ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.