தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேருந்துகள் இயக்கம் - புதுமைப் பெண் திட்டம்

தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் மற்றும் காலை உணவுத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அரசின் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பேருந்துகள் இயக்கம்
அரசின் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பேருந்துகள் இயக்கம்

By

Published : Oct 3, 2022, 6:18 PM IST

சென்னை: பல்லவன் சாலை மாநகரப்போக்குவரத்துக்கழக மத்திய பணிமனையிலிருந்து தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் மற்றும் காலை உணவுத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கும் "புதுமைப் பெண்" திட்டத்தையும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு "காலை உணவு" திட்டத்தையும் அண்மையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகரப்போக்குவரத்துக்கழகம் சார்பாக சென்னை முழுவதும் பத்து இடங்களுக்கும் மேலாக விழிப்புணர்வு பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டன. இதனால் இந்த திட்டங்கள் குறித்து மேலும் பொதுமக்கள் தெரிந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி வழங்குக - ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் வென்றவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details