தமிழ்நாடு

tamil nadu

370 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!

By

Published : Sep 26, 2019, 1:40 PM IST

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் 7 மாவட்டங்களுக்கு 370 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.

370 புதிய பேருந்துகள் தொடங்கி வைத்த முதலமைச்சர்!

109 கோடி ரூபாய் மதிப்பில் போக்குவரத்துத் துறை சார்பாக 370 புதிய பேருந்துகளும்,
மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 4 மருத்துவ அவசர ஊர்தியையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூர்) - 104

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) - 57

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) - 41

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) - 27

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) - 26

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) - 20

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் - 65

மாநகர் போக்குவரத்துக் கழகம் - 30

370 புதியப் பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!

ஏற்கெனவே சட்டப் பேரவையில், 110 விதியில் 600 கோடி செலவில் கீழ் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், பல கட்டங்களாக இதுவரை ஆயிரத்து 314 கோடி ரூபாய் செலவில், 4 ஆயிரத்து 381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று அறிமுகப்படுத்திய புதிய பேருந்துகளைச் சேர்த்து, மொத்தம் ஆயிரத்து 423 கோடி ரூபாய் செலவில், 4751 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details