சென்னை: சில பகுதிகளில் பெண்களுக்கான இலவச பேருந்தில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக ஒருக்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று பதிலளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. எந்த வழித்தடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓ. பன்னீர்செல்வம் அரசியல் லாபத்திற்காக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பேருந்தில் சிசிடிவி கேமரா
அரசு பேருந்துகளில் மகளிர் பயணம் செய்வது 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுவரை 47 ஆயிரத்து 846 திருநங்கைகள், நான்கு லட்சத்து 43 ஆயிரத்து 163 மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய உதவியாளர்களாக 36 ஆயிரத்து 51 நபர்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.