சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லும் தடம் எண் 101 பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டி வந்தார். திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே வந்தபோது, அவ்வழியாக சென்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பேருந்தை முந்திச் சென்றார். இதனால், பேருந்து ஓட்டுநருக்கும் ஆட்டோ ஓட்டுநரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்! - fight
சென்னை: திருவொற்றியூர் அருகே பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாக்குவாதம் கைகளப்பாக மாறிய நிலையில், எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன் குடிபோதையில் இருந்ததால், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட பாஸ்கரன் பேருந்தை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைத்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.