சென்னை: ஆவடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால், நடிகர் வடிவேலு காமெடியில் வருவதுபோல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பேருந்து நடத்துனர் கீழே விழுந்தார்.
சென்னை ஆவடி காமராஜர் நகர் அருகே தடம் எண் 623 வழி சென்ற மாநகரப் பேருந்து, பூந்தமல்லி நோக்கி இன்று (அக்.07) மதியம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, குழந்தை ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால், பேருந்து ஓட்டுநர் சேகர் திடீரென 'பிரேக்' பிடித்தார்.
இதில், டிக்கெட் கொடுத்துக்கொண்டு வந்த நடத்துநர் ஆறுமுகம் (38), நிலைதடுமாறி, நடிகர் வடிவேலு பட காமெடியில் வருவதுபோல், முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தார்.