தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பண்டிகை: பேருந்து முன்பதிவு தொடக்கம் - வெளியூர் செல்பவர்களுக்கான பேருந்து முன்பதிவு ட

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் வெளியூர் செல்பவர்களுக்கான பேருந்து முன்பதிவு இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன.

Bus booking started from today ahead of the Pongal festival
Bus booking started from today ahead of the Pongal festival

By

Published : Dec 11, 2020, 1:34 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா பாதிப்புக்குப் பிறகு தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் சென்ற மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பணிகள் இன்றுமுதல் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதற்காக மக்கள் www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய வலைத்தளங்களில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி சிறப்பு பேருந்துகள் முன்பதிவில் சுணக்கம்!

ABOUT THE AUTHOR

...view details