சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் இருந்து சுங்கச்சாவடிவரை செல்லும் பேருந்து சுங்கச்சாவடி அருகே வந்தபோது மெட்ரோ ரயில் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு இரும்பு வேலி மீது மோதி பலத்த சேதம் அடைந்தது. இதில் மாநகரப் பேருந்தின் முன் கண்ணாடிகள் நொறுங்கின. உடனே தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மெட்ரோ தடுப்பில் பேருந்து மோதி விபத்து! - metro work
சென்னை: மெட்ரோ பணி தடுப்பு இரும்பு வேலி மீது மோதி திருவொற்றியூர் மாநகரப் பேருந்து பலத்த சேதம் அடைந்தது, அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் உயிர் தப்பினர்.
bus
அதனைத் தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் மாநகரப் பேருந்து ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தியின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் மாநகரப் பேருந்தில் பழுது ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பாக தொடர்ந்து போக்குவரத்து புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.