சென்னை ஓட்டேரி குளக்கரை சாலை பிரிஸ்லி நகரை சேர்ந்தவர் செல்வமணி. இவர் கடந்த 2 வருடமாக தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று (மே.03) செல்வமணி தனது பணியை முடித்துவிட்டு, வீட்டிற்கு சென்ற அவர், தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது நள்ளிரவில் அவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் செல்வமணிக்கு தகவல் அளித்ததன் பேரில், செல்வமணி தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. பின் இதுகுறித்து, செல்வமணி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.