இது குறித்து வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "புயல், மழைக்காலங்களில் விவசாயிகள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. நெல், தென்னை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு பல ஆண்டுகள் பலன் தரும் மரங்களைப் பாதுகாக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வருகின்ற டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தி, சாகுபடி செய்ததற்கான அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.