பெட்ரோல் போட வந்தவரை தாக்கிய பங்க் ஊழியர் சென்னை: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் ஒன்று 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போடுவதற்காக வெனிஸ்டர் (48)
என்பவர் வந்தார்.
அப்போது, பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த ஊழியர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும்போது பெட்ரோல் டேங்கை நிரப்பி தரையில் சிந்தியுள்ளார். இதைப் பார்த்த வெனிஸ்டர், 'ஏன் பெட்ரோலை கீழே வழிய விடுகிறாய், ஒழுங்காக போடக்கூடாதா?' எனக் கேட்டதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சேர்ந்து வெனிஸ்டர் என்பவரை சரமாரியாக தாக்கினர். அப்போது வெனிஸ்டருக்கு முதுகு பகுதியில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றார். பிறகு சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வெனிஸ்டரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:பைக்கில் 4 பேர் பயணம்: சோசியல் மீடியா புகாருக்கு உடனே ரெஸ்பான்ஸ் செய்தபோலீஸ்