சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கப்பிரிவு முனையத்திற்கு ஜெர்மனியில் இருந்து தோகா வழியாக சரக்கு விமானம் நேற்று வந்தது. இந்த விமானத்தில் இனப்பெருக்கத்திற்காக 105 ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த காளை மாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்காக தேசிய பால் மேம்பாட்டு வாரியம் வரவழைத்துள்ளது.
மாடுகளின் இனப்பெருங்கத்திற்காக ஜெர்மனியில் இருந்து விமானத்தில் காளைகள் வரவழைப்பு - சரக்கு விமானம்
சென்னை: இனப்பெருக்கத்திற்காக ஜெர்மனியில் இருந்து காளை மாடுகளை தேசிய பால் மேம்பாட்டு வாரியம் வரவழைத்துள்ளது.
ஜெர்மனியில் இருந்து கொண்டுவரப்பட்ட காளை மாடுகள்...
ஒவ்வொரு காளை மாடும் 250ல் இருந்து 300 கிலோ எடை கொண்ட மரப்பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்தன. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு அனுப்பப்பட்டன. இந்த காளைகள் சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்தின் பால் பண்னையில் சில காலம் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.