சென்னை: இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தபின் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, தமிழ்நாட்டில் கடந்த 22 ஆண்டுகளாக கட்டடங்களுக்கான விதிமுறைகள் மாற்றப்படவில்லை. இதனால் பல வணிக வளாகங்கள், விற்பனை அங்காடிகள் விதிமீறல் கட்டடமாக உள்ளன. இதனை பயன்படுத்தி சமூகவிரோதிகள் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கட்டட விதிமுறைகள் காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும் - விக்ரமராஜா - தலைமை செயலகம்
தமிழ்நாட்டில் கட்டிட விதிமுறைகள் காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட வேண்டும், என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா கோரிக்கை
இதனால் பல மாவட்டங்களில் வணிகர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு காலத்திற்கு ஏற்ப விதிமீறல் கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பட்டியல் இனத்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்