இது தொடர்பாக இன்று சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தமிழ்நாடு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தலைவர் செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ”தனியார்மயமாக்குதலைக் கண்டித்து நாளுக்கு நாள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் இதனை தனியார்மயமாக்கினால் மக்கள் பாதிப்படைவார்கள்.
ஒரு வார கால பரப்புரையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் இவை அனைத்தும் மக்கள் சொத்து. அனைத்தையும் தனியாருக்கு கொடுத்தால் மக்கள் பாதிப்படைவார்கள். எங்களால் மக்களுக்கு நல்ல சேவையைக் கொடுக்க முடியும். அதனால் அரசு இந்தத் திட்டத்தினைக் கைவிட வேண்டும். மற்ற மூன்று நிறுவனங்களுக்கு 4ஜி சேவையை கொடுத்த அரசு, எங்களுக்கு கொடுப்பதில் தாமதப்படுத்துகிறது.
பிஎஸ்என்எல் சரியான சேவை கொடுக்க முடியவில்லை என்று சொல்லுகிறது. எனவே எங்களுக்கும் மற்ற நிறுவனங்களைப்போல 4ஜி கருவிகள் வாங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அதற்காக ஒருவார காலத்திற்குப் பரப்புரை இயக்கம் நடத்த இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கரோனா தடுப்பு நடவடிக்கையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்!'