பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால சலுகைகள் குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், 1,699 ரூபாய்க்கான தற்போதைய வேலிடிட்டி நாட்களை 365லிருந்து 455 நாட்களாக நீட்டிப்பு செய்துள்ளது. நாளுக்கு இரண்டு ஜிபி டேட்டா, 250 ஃபோன் கால்கள், 100 எஸ்எம்எஸ், இதுதவிர இலவச காலர் ட்யூன் போன்ற வசதிகளை 2019ஆம் ஆண்டு முழுவதுக்குமாக அறிவித்துள்ளது.
மேலும், புதிய வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக 105, 107 ரூபாய்க்கான வவுச்சர்களில் அளவில்லா ஃபோன் கால்கள், எஸ்எம்எஸ் வசதிகள் கொடுக்கப்படவிருக்கின்றன.