சென்னை:பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஸ்டீல்ஸ் என்ற நிறுவனம் எஸ்பிஐ கன்சார்டியம் வங்கிகள் மூலம் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து கடன்பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டிலிருந்து வங்கிகளிடம் பெறப்பட்ட கடனை இந்நிறுவனம் தவறாகப் பயன்படுத்தி வந்தது வங்கிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் துணை பொது மேலாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரில் சிபிஐ இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வடிவாம்பாள் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.