தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செம்பரம்பாக்கம் ஏரியில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு - Kilpauk Government Hospital

செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் குளித்த சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி
செம்பரம்பாக்கம் ஏரியில் குளித்த சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி

By

Published : Jan 27, 2023, 9:58 AM IST

சென்னை: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சச்சின் (13) தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர் வேலுமணியின் மகன் நடிஷ் (13), அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று (ஜனவரி 26) குடியரசு தின விழா பள்ளி விடுமுறையையொட்டி சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பதற்காக சென்றனர்.

அங்கு குளித்து கொண்டிருந்தபோது இருவரும் நீரில் மூழ்கினர். அதனை கண்டதும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்க முயன்றனர். மீட்க முடியாததால், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்துக்கு விரைந்து ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இருவரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மின்சார பந்தய கார்களை உருவாக்கிய பிஎஸ்ஜி ஐடெக் மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details