சென்னை: மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50). இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மேகலா இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் நடராஜன்(30) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அபிநயா(28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.