தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான் ஏன் வெட்கப்பட வேண்டும்; இந்த சமூகம் தான் வெட்கப்படவேண்டும் - 'சிங்கபெண்' லக்ஷ்மி அகர்வால்

சில வருடங்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும் போது என் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்பொழுது நான் அப்படியல்ல எனது முகத்தை நான் எதற்காக மறைக்க வேண்டும் என் முகத்தை இந்த நிலைக்கு செய்த சமூகம் தான் வெட்கப்பட வேண்டும்

By

Published : Nov 18, 2019, 4:00 AM IST

lakshmi

சென்னை: :ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மணமகள் அலங்காரம் செய்து நடிகை சந்தோஷி அசத்தியுள்ளார்.

நடிகை ரக்ஷிதா

தமிழ் திரை படங்களில் குணச்சித்திர வேடத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தோஷி. இவர் நடிகையாக மட்டுமல்லாது அழகு நிலையமும் நடத்திவருகிறார். இந்நிலையில் இவர் சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அழகுக்கலை குறித்த கருத்தரங்கை நடத்தினார்.

நடிகை சந்தோஷி கருத்தரங்கம்

இதில் அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால், நடிகை நமீதா ஆகியோர் கலந்துக்கொண்டனர். மேலும் இந்த கருத்தரங்கில் சந்தோஷி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் மற்றும் வெண்புள்ளி நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் மணப்பெண் அலங்காரம் செய்து காட்டினார்.

நடிகை சந்தோஷி கருத்தரங்கம்

இதில் கலந்துகொண்ட லக்ஷ்மி அகர்வால் பேசுகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும் போது என் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்பொழுது நான் அப்படியல்ல எனது முகத்தை நான் எதற்காக மறைக்க வேண்டும் என் முகத்தை இந்த நிலைக்கு செய்த சமூகம் தான் வெட்கப்பட வேண்டும்.

இப்போது என் முகத்தை வெளியில் காட்டி செல்ல தயங்குவது இல்லை. நான் ஒரு பாதிக்கப்பட்ட பெண் என்று கூறப்படுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details