பாலூட்டும் தாய்மார்கள், கரோனாவுக்கு எதிராக எந்தத் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், தடுப்பூசி போடுவதன் காரணமாக தாய்க்கு உருவாகும் எதிர் பொருள், தாய்பாலூட்டும் போது குழந்தைக்கும் சென்று பயனுள்ளதாக இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவு தலைவர் மருத்துவர் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
எதிர் பொருள் பரிசோதனைக்கு செல்வது வீண்
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, “நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்பொருள்களை மட்டும் சார்ந்தது அல்ல என்பதால், எதிர்பொருள் பரிசோதனைக்கு செல்வது வீண்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சந்தையில் கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி, உடலில் உருவாகும் எதிர்பொருள்கள், கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் எதிர்பொருள்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவர் தடுப்பூசி போடும்போது இரு வகையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஒன்று எதிர்பொருளை சமநிலைப்படுத்தும். இரண்டாவது செல் மத்தியஸ்த நோய் எதிர்ப்பு சக்தியாகும்.
மூன்றாவது மிக முக்கியமான ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி. இந்த நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி போட்டபின்பு ஏற்படுகிறது இது உடல் செல்லில் இருக்கிறது. தொற்று உடலில் நுழையும்போது, இது எதிர்த்து செயல்படுகிறது” என்கிறார்.