சென்னை விமான நிலையங்கள் ஆணையம், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. விமான நிலைய பன்னாட்டு முனைய வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், சுங்கத்துறை துணை ஆணையர் சவுத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, சவுமியா அன்புமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தன்னார்வ அமைப்பு சார்பில் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் ஒரு மாதம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. சென்னை போன்ற நகரங்களில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு இருந்தாலும் கிராமப்புறங்களில் இல்லை.
இதுகுறித்து நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் அறிந்து கொண்டால் ஊர்களுக்கு செல்லும் போது மற்ற பெண்களிடம் தெரிவிப்பார்கள். மரபணு முலமாக மார்பகப் புற்றுநோய் வந்தால் எதுவும் செய்ய முடியாது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "மனிதர்கள் தங்கள் வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்க முறையையும் மாற்றிக் கொண்டால் அது நல்ல மாற்றங்களைக் கொடுக்கும்.