தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 5,990 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

மேலும் 5,990 பேருக்கு கரோனா தொற்று உறுதி
மேலும் 5,990 பேருக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Sep 2, 2020, 6:11 PM IST

Updated : Sep 2, 2020, 8:40 PM IST

18:10 September 02

தமிழ்நாட்டில் இன்று (செப்.2) மேலும் 5,990 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் புதிதாக 73 ஆயிரத்து 883 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5,962 நபர்களுக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 28 நபர்களுக்கும் என 5,990 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 47 லட்சத்து 99 ஆயிரத்து 905 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 959 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 52 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்து 5891 பேர் இன்று வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 63ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 98 பேர் உயிரிழந்தனர்.  

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 516ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 12 வயதிற்குட்பட்ட 20,131 இதுவரை கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 60 வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 62 ஆயிரத்து 522 நபர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட 57 ஆயிரத்து 306 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்: 

சென்னை - 1,37,732  

செங்கல்பட்டு - 26,907  

திருவள்ளூர் - 25,330

காஞ்சிபுரம் - 17,663

மதுரை - 14,386

கோயம்புத்தூர் - 16,662

விருதுநகர் - 12,842

தேனி - 12,827

தூத்துக்குடி - 11,532

வேலூர் - 11,081

கடலூர் - 12,145

ராணிப்பேட்டை - 10,796

திருவண்ணாமலை - 10,825

சேலம் - 11,826

கன்னியாகுமரி - 9,821

திருநெல்வேலி - 9,796

திருச்சிராப்பள்ளி - 7,684

விழுப்புரம் - 7,821

திண்டுக்கல் - 6,802

தஞ்சாவூர் - 6,886

புதுக்கோட்டை - 6,245

கள்ளக்குறிச்சி -  6,343

தென்காசி - 5,547

ராமநாதபுரம் - 4,815

சிவகங்கை - 4,114

திருவாரூர் - 3,819

திருப்பத்தூர் - 3,000

ஈரோடு - 3,359

அரியலூர் - 2,862

திருப்பூர் - 2,904

நாகப்பட்டினம் - 2,845

கிருஷ்ணகிரி - 2,236

நாமக்கல் - 2,298

நீலகிரி - 1,667

கரூர் - 1,682

பெரம்பலூர் - 1,347

தருமபுரி - 1,309

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 921

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 854

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

Last Updated : Sep 2, 2020, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details