சென்னை, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், ஏ.எல்.எஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(30). இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 25 ஆம் தேதி கார்த்திகேயன் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம், தொட்டியம் கிராமத்திற்குச் சென்றுவிட்டு நேற்று(ஜன.29) வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 6 சவரன் தங்க நகைகள், 2 மடிக்கணினிகள் கொள்ளைப் போயிருந்தது தெரியவந்தது.