சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் செயலர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கர்நாடகாவில் புதிதாகப் பொறுப்பேற்ற முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாதுவில் அணை கட்ட உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீர்ப்பாசன துறைக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பாசன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
நீர்ப்பாசன பிரச்சினைகளில் ஏற்படுகின்ற பாதிப்புகளை விரைந்து தீர்த்திட உயர் நீதிமன்றத்துக்கு இணையான தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். காவிரியின் குறுக்கே பரமத்தி வேலூர் பகுதியில் ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் கட்டண நிர்ணயம்செய்து நீர் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வணிக நோக்கோடு தனியார் நிறுவனங்கள் மோசடி வேளையில் ஈடுபடுகிறது.