தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாய் பெஸ்டிக்கு கத்தி குத்து.. காதலியை அம்மு என அழைத்ததால் ஆத்திரம்.. - சென்னை

தன்னுடைய காதலியை ’அம்மு’ என தனது நண்பனே கூறியதால் ஆத்திரமடைந்து நண்பனை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலியை ’அம்மு’ என அழைத்த நண்பனை கத்தியால் குத்திய காதலன் கைது!
காதலியை ’அம்மு’ என அழைத்த நண்பனை கத்தியால் குத்திய காதலன் கைது!

By

Published : May 11, 2022, 12:01 PM IST

Updated : May 11, 2022, 12:27 PM IST

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(34), கழிவுநீர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். ராமச்சந்திரன் பணிபுரியும் கழிவுநீர் லாரிகளின் அலுவலகத்தில் உதவியாளராக நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவரும் பணியாற்றி வருகிறார்.இருவரும் நண்பர்களாகி தினமும் இரவில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வருவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் இவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் வேலை செய்யும் கௌசல்யா என்ற திருமணமான பெண்ணுடன் ராமச்சந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராமச்சந்திரனுக்கும், கௌசல்யாக்கும் ஒரு வார காலமாக சண்டை ஏற்பட்டு பேசாமல் இருந்துள்ளனர். மேலும் ராமச்சந்திரனின் தொலைபேசி எண்ணை கௌசல்யா பிளாக் லிஸ்டில் போட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராமச்சந்திரன் இரவில் வழக்கமாக தனது நண்பர் சுப்பிரமணியன் உடன் மது அருந்தும் போது இது குறித்து தெரிவித்துள்ளார்.இதனால் தன் நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக கௌசல்யாவின் தொலைபேசிக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தபோது சுப்பிரமணியன் “செல்லம், அம்மு” என்ற கொஞ்சல் வார்த்தைகளால் பேசியுள்ளர்.

எனவே தன்னுடைய காதலியிடம் நீ எதற்கு அம்மு செல்லம் என பேசுகிறாய் என ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியின் முகம் முதுகு கை உள்ளிட்ட இடத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் காயமடைந்த சுப்பிரமணியனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வீட்டில் பதுங்கியிருந்த ராமச்சந்திரனை அதிரடியாக கைது செய்தனர். இதன் பின்னர் ராமச்சந்திரனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ராமச்சந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Last Updated : May 11, 2022, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details