சென்னைபல்லாவரம் அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். சிறுமிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுவதாகக் கூறியதால் சிறுமியின் பெற்றோர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்ததில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் குன்றத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் காவல்துறையினர் அந்த தகவலைத் தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்குத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது அதில், குன்றத்தூரை சேர்ந்த விக்னேஷ் (வயது-22) இவர் அதே பகுதியில் உள்ள பூ செடிகள் விற்பனை செய்து கார்டனில் வேலை செய்து வருவதும் அப்போது பள்ளிக்குச் செல்லும் போது 16 வயது சிறுமியிடம் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. 6 மாதமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 5 மாதத்திற்கு முன்பு, சிறுமியை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு குன்றத்தூர் பகுதியில் சுற்றியுள்ளான். இதில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகச் சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி 4 மாதம் கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, விக்னேஷை கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!