தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனை தனது இருக்கையில் உட்கார வைத்து அழகு பார்த்த காவல் ஆணையர் - பணி நிறைவு விழா

பணி ஓய்வு பெற்ற எஸ்ஐ-க்கு நடந்த பாராட்டு விழாவில் காக்கி உடையில் கம்பீரமாக வந்த அவரது பேரனை தனது இருக்கையில் உட்கார வைத்து அழகு பார்த்தார் ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர்.

பணி நிறைவு பாராட்டு விழாவில் எஸ்ஐ யின் பேரனனை தனது இருக்கையில் உட்கார வைத்த  காவல் ஆணையர்
பணி நிறைவு பாராட்டு விழாவில் எஸ்ஐ யின் பேரனனை தனது இருக்கையில் உட்கார வைத்த காவல் ஆணையர்

By

Published : Jun 2, 2022, 7:38 PM IST

சென்னை:நேற்றைய (ஜூன் 1) தினத்தில் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில், ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் செங்குன்றம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்ஐ சாரலாதன் தனது 4 வயது பேரன் பிரணவ் சாய்யை கம்பீரமாக காக்கி உடையில் அழைத்துவந்தார்.

காவல் ஆணையரின் காணொலி

இதனைக் கண்ட காவல் ஆணையர் சிறுவனை தூக்கி வந்து தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், வருங்காலத்தில் காவல்துறையில் பணியாற்ற கனவுடன் இருக்கும் சிறுவனை பாராட்டி, தனது இருக்கையில் அமர வைத்தது வந்திருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:நேதாஜியின் ஐஎன்ஏ பிரிவில் இருந்த அஞ்சலை பொன்னுசாமி மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details