ராட்த துளையிடும் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்து -அதிஷ்டவசமாக 3பேர் உயிர் தப்பினர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மாதவரம் முதல் சிறுசேரி -சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் சென்னை போருர் ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் பணியின் போது மெட்ரோ ரயில் பணியாளரின் கவனக் குறைவால் சாலையில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்த இயந்திரம் அருகே இருந்த வீட்டில் மோதி விபத்து ஏற்பட்டது. துளையிடும் கருவி போருர் அஞ்சுகம் நகரில் உள்ள பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது மோதியது. இதில் வீட்டின் மேல் தளத்தில் சுவர்கள் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பலவேறு பொருட்கள் சேதமாகின.
இதையும் படிங்க:"ஆளுநரும், அரசும் மோதலை கைவிட்டு செயல்படுக" - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வலியுறுத்தல்!
இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த கணவன், மனைவி, குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிர் தப்பினர். இதனை அறியாமல் அக்கம் பக்கதினரோ பூகம்பம் தான் வந்து விட்டது என்று நினைத்து வீட்டில் இருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போரூர் போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். மேலும் இது தொடர்பாக போலிசார் விசாரித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பணியில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்த இயந்திரம் சுமார் 100 டன் எடையில் 200 அடிக்கு மேல் உயரம் கொண்டது.
சாய்வாக இருக்கும் இந்த இயந்திரத்தை பயன்படுத்த செங்குத்தாக நிலை நிறுத்த வேண்டும். அப்படி நிலை நிறுத்தும் போது பின்னால் இருந்த வீட்டை கவனிக்காமல் ஆபரேட்டர் செயல்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கட்டுமான நிறுவனத்தினர் இன்று (செப். 9) காலை பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு அனைத்தையும் சீர் செய்து நடவடிக்கை தருவதாக தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:திமுக கொடி கம்பம் நடும்போது நேர்ந்த சோகம்! மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் படுகாயம்!