தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு! - Security Force soldier died

சென்னை: சாலை விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனம்
இருசக்கர வாகனம்

By

Published : Sep 28, 2020, 8:04 PM IST

வேலூர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் லெனின் (39). சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த இவருக்கு, நீதிதேவி (35) என்ற மனைவி உள்ளார். நீதிதேவி சென்னையில் தங்கி தமிழ்நாடு கமாண்டோ படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், லெனின் அவரது அப்பாவிற்கு திதி கொடுப்பதற்கு சொந்த ஊரான வேலூர் செல்வதற்கு விடுமுறையில் வந்திருந்தார். இதற்கிடையில் சென்னையில் தனது வீட்டில் தங்கி இருந்த உறவினரை, நேற்று (செப்.28) காலை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மெரினா காமராஜர் சாலை வழியாக லெனின் அழைத்துச் சென்றார்.

இருசக்கர வாகனத்தில் தனது உறவினருடன் அவர் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக எதிர் முனையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் லெனின் வாகனம் மீது மோதினர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் லெனின் சாலையில் விழுந்தார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள், உடனே லெனினை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் இன்று (செப்.28) சிகிச்சை பலனின்றி லெனின் பரிதாபமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். விபத்தின்போது இருசக்கர வாகனத்தில் லெனின் உடன் பயணித்த யாரும் ஹெல்மெட் அணியவில்லை என்றும், எதிர்முனையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த முன்று பேரும் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சொத்து வரி செலுத்துவோருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை!

ABOUT THE AUTHOR

...view details