தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை புத்தகக் காட்சியில் ரூ.12 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை - பபாசி தகவல்

சென்னையின் 45ஆவது புத்தகக் காட்சியில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) தகவல் தெரிவித்துள்ளது.

By

Published : Mar 6, 2022, 8:38 PM IST

சென்னை புத்தக கண்காட்சியில் ரூ.12 கோடிக்கும் அதிகமாக புத்தக விற்பனை - பாபசி தகவல்
சென்னை புத்தக கண்காட்சியில் ரூ.12 கோடிக்கும் அதிகமாக புத்தக விற்பனை - பாபசி தகவல்

சென்னை: கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி 45ஆது புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு பெறவுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். அதற்கு ஏற்றவாறு சலுகைகளும் புத்தக விற்பனையாளர்கள் தந்து கொண்டிருக்கின்றனர்.

15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள்

20ஆவது நாளாக நடைபெற்ற இந்த புத்தகக் காட்சியில் இதுவரை 8 லட்சம் மாணவர்கள் உட்பட 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் இதுவரை பார்வையாளர்களாக வருகை தந்துள்ளனர் எனவும்; ரூ.12 கோடிக்கும் அதிகமாக புத்தக விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் பபாசி தகவல் தெரிவித்துள்ளது.

வழக்கம்போல் அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் அத்தோடு புதினம், அரசியல், வரலாறு, ஆன்மிகம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளன என புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

’பொன்னியின் செல்வன்’ புத்தகம் எப்போதும் போன்று அதிக பதிப்பகங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு 10 லட்சம் பேர் வருகை தந்த நிலையில் இந்த முறை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக பபாசியின் தலைவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Thalapathy 67: மீண்டும் லோகேஷ் கனகராஜூடன் இணையும் தளபதி விஜய்!

ABOUT THE AUTHOR

...view details