சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. வலிமை படத்தை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் (AK 61) நடிக்க உள்ளார். இது இருவரும் மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைக்கும் படமாகும். இந்தப் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்றும் வரும் நிலையில், வரும் மார்ச் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக சென்னை அண்ணாசாலை போன்ற செட் ஒன்று ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிய உள்ளதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மங்காத்தாவிற்கு பின்...