தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை! - bomb threatened 2year conviction order

சென்னை: தலைமைச் செயலகம், மத்திய ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

bomb threat
bomb threat

By

Published : Dec 13, 2019, 7:32 AM IST

சென்னை அரசுத் தலைமைச் செயலகம், மத்திய ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கடந்த 2007ஆம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த ஸ்டாலின் சாஜின் (37) என்பவர், வேறு ஒருவரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ஸ்டாலின் சாஜின் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூரிலுள்ள பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசுத் தரப்பில் கூடுதல் அரசு உதவி வழக்கறிஞர் ப.வாஷிங்டன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் ரவி, குற்றம் சாட்டப்பட்ட ஸ்டாலின் சாஜினுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க: "அட்டாக் பாண்டி" மதுரை சிறைக்கு மாற்றம் - சிறைத்துறை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details