சென்னை:திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்கும் என முதலமைச்சர் உதவிக்கான கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிரட்டல்விடுத்து தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக வெடிகுண்டு வல்லுநர்களுடன் காவல் துறையினர் கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.