தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகளிடையே பரபரப்பு - bomb threat

தொலைபேசி மூலம் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தனர்

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகளிடையே பரபரப்பு
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகளிடையே பரபரப்பு

By

Published : Jun 22, 2022, 6:45 PM IST

சென்னை:தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்பு ஆயுதப்படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் மோப்ப நாய் உதவியுடன் தாம்பரம் இரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர சோதனையில் எந்த இடத்திலும் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் போலீசார் தாம்பரம் ரயில் நிலையத்தில் முகாமிட்டு பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை திடீரென மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு பரிசோதனையில் ஈடுபட்டதால் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகளிடையே பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details