தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஈடிவி செய்திகள்

சென்னை: சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு அடையாள தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

By

Published : Apr 9, 2021, 4:39 PM IST

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இருக்கக்கூடிய இமிக்ரேஷன் அலுவலகத்திற்கு இன்று (ஏப்.9) காலை பத்து மணியளவில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 15 கிலோ வெடிப்பொருள் இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடிக்க போவதாகவும் கூறினார். இந்நிலையில் தொடர்பையும் துண்டித்துவிட்டார்.

சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இதையடுத்து, உடனடியாக, அலுவலர்கள் நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, செல்போனில் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல் - 72.81 % வாக்குகள் பதிவு

ABOUT THE AUTHOR

...view details