தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: முதலமைச்சர் பழனிசாமி வீடு, தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

By

Published : Jun 2, 2020, 3:46 PM IST

Updated : Jun 2, 2020, 9:14 PM IST

சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு, தலைமைச் செயலகத்தில் வெடுகுண்டு வைத்திருப்பதாக அடையாளம் தெரியாத நபர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். அதனையடுத்து, வெடிகுண்டு வல்லுநர்களுக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே, வெடிகுண்டு வல்லுநர்கள் முதலமைச்சர் பழனிசாமி வீடு, தலைமைச் செயலகத்திற்கு மோப்ப நாய்களுடன் விரைந்து சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின்பு வெடிகுண்டு மிரட்டல் பொய்யான தகவல் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேரந்த புவனேஸ்வர்(27) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமை காவலர் கைது!

Last Updated : Jun 2, 2020, 9:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details